பாகம் 4 - மோசேயின் நியாயப்பிரமாணத்தினால் வரும் இடறல். *படிப்பினை/Teaching: இடறல்கள் குறித்த வேத சத்தியம் - இடறல்கள் வருவது அவசியம். பரலோகப் பாதையில் இடறல்களைக் கர்த்தர் இயேசுவே அனுமதித்துள்ளார். அவர்மீது உண்மையான அன்பில்லாதவன் இடறிப்போவதற்கு கர்த்தர் இயேசு வழி உண்டாக்கியிருக்கிறார்.*
(Part 1 dt. 9th Dec. 2019, Part 2 was released on 12th Dec. 2019)
*16. சாத்தானால் வரும் இடறல் #2* மோசேயின் நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின் சபைக்கு, ஆதி அப்போஸ்தலர்கள் காலத்திலிருந்து இன்று வரை மிகப்பெரிய இடறல்.
*பாவத்துக்கடுத்தது மோசேயின் நியாயப்பிரமாணம் கிறிஸ்துவின் சபைக்கு மிகப்பெரிய இடறல். இதுதான் இன்று இயேசுவுக்கு #1 எதிரி!*
*16.1 இஸ்ரவேலருக்குத் தரப்பட்ட மோசேயின் நியாயப்பிரமாணம் இன்றைய சபைக்கு ஒரு மிகப்பெரிய இடறலாயிருக்கிறது. ஆதி சபையிலிருந்து இன்று வரை இது புறஜாதிகளுக்கு இடறலாகவே நிற்கின்றது. சபையில் தேவனுடைய பிரமாணம் நிறைவேறவிடாமல் இது தடுக்கிறது. இன்று மோசே நியாயப்பிரமாணத்தின் சட்டங்களான தசமபாகம், ஓய்வுநாள், காணிக்கை, பொருத்தனை, பாஸ்டர்தான் ஆசாரியர், பண்டிகைகள் ஆகியவை சர்வசாதாரணமாகக் கிறிஸ்துவின் சபைகளில் பின்பற்றப்படுகிறது. தங்களுக்கு ஒருபோதும் தரப்படாத இந்த மோசேயின் நியாயப்பிரமாணத்தை புறஜாதி கிறிஸ்தவ சபைகள் பணத்துக்காகப் பிடித்துக்கொண்டு இடறியுள்ளன.*
16.2 ஆதிசபை காலத்தில் இயேசுவின் சபை மோசேயின் நியாயப்பிரமாணத்திலிருந்து தப்பிய விபரத்தை நாம் அப்போஸ்தலர் 15:5-29ல் படிக்கிறோம். கலாத்தியர் நிருபம் 6 அதிகாரங்களிலும் அப்போஸ்தலனாகிய பவுல் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் முற்றிலும் விழுந்துபோன கலாத்திய சபைக்கு அறிவுரை கொடுத்து அவர்களைக் கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள் வர அறிவுரை கூறியுள்ளான்.
16.3 ஆயினும் இன்று கிட்டத்தட்ட 100 சதவீதம் ஞாயிற்றுக்கிழமை கட்டிட சபைகள் மோசேயின் நியாயப்பிரமாணமான தசமபாகம், காணிக்கை, ஒய்வுநாள், பொருத்தனை, கட்டிடம்தான் தேவாலயம் என்ற கட்டளைகளைப் பின்பற்றி வருகின்றன.
Rest in the link file

0 Comments